நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மறைந்த நடிகை சரோஜாதேவி கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் கடைசியாக நடித்த படம் 'ஆதவன்'. கே.எஸ்.ரவிகுமார் இயக்க, சூர்யா, நயன்தாரா நடித்து இருந்தனர். சரோஜாதேவி மறைவையொட்டி அந்த பட அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
அவர் கூறுகையில் ''தமிழில் ஒன்ஸ்மோர் படத்துக்குபின் ஏனோ சரோஜா தேவி தமிழில் நடிக்காமல் இருந்தார். அவருக்கு நிறைய அன்பு தொல்லை கொடுத்து ஆதவனில் நடிக்க வைத்தேன். அந்த படம் வெளியாகி 12 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும், அந்த படப்பிடிப்பு அனுபவங்களை மறக்க முடியாது.
ஆதவன் படத்தில் அற்புதமான ஒத்துழைப்பு கொடுத்தார், படப்பிடிப்பில் எனக்கு ரொம்பவே மரியாதை கொடுத்தார். வணக்கம் டைரக்டர் சார், ஆரம்பிச்சிட்டீங்களா, சாரி கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் என்று பலமுறை ஈகோ இல்லாமல் பேசினார். பொதுவாக, சரோஜாதேவி தனது மேக்கப்பில் அவ்வளவு அக்கறையாக இருப்பார். ஆதவன் திரைப்படத்தில் சரோஜாதேவியின் மகன் இறந்தது போல ஒரு காட்சி படமாக்கப்பட்ட பொழுது மேக்கப் குறைக்க சொல்லி கேட்டோம், அதற்கு கூட இதுக்குமேல் குறைக்க முடியாது மறுத்துவிட்டார்.
என் வீட்டிற்கு வரும் தயாரிப்பாளர்களோ இயக்குனர்களோ வந்தால் கூட மேக்கப்பில்தான் இருப்பேன் என்று புது தகவலையும் சொன்னார். மேக்கப்பில் இருக்கணும்னு எம்ஜிஆர் சொல்லியிருக்கிறார் என்றார். அவர் கூறிய அந்த அனுபவங்களை படத்தில் ஒரு சீனாக வைத்தோம். மேக்கப் குறித்து வடிவேலு கிண்டல் பண்ணுற டயலாக் இருந்தது. அந்த காட்சியை பார்த்துவிட்டு என்னை கிண்டல் செய்கிறீர்களா என சிரித்துக்கொண்டே கேட்டார் அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது..
கடைசியாக அர்ஜுன் மகள் திருமணத்தில் தான் பார்த்தேன் அப்பொழுது கூட நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம் . தமிழகத்தில் எந்த நிகழ்ச்சி என்றாலும் பெங்களூரில் இருந்து வந்து செல்வார். அவர் படங்களை, பாடல்களை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது. வாழ்க்கை என்பது நமக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்தான். இன்னும் வேண்டுமென்றால், சிலரை மேலே சென்று தான் சந்திக்க வேண்டும். இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் பேசினார்.