சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
ரஜினி ரசிகர்களுக்கு நேற்று மிக முக்கியமான நாள். அதை நினைவு கூர்ந்து பலரும் உணர்ச்சிவசப்பட்டார்கள். கடவுக்கு நன்றி சொன்னார்கள். அப்படி என்ன நாள் என்கிறீர்களா? 2011ம் ஆண்டு அவர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர், அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக மே 28, 2011ம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து 2011ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி சென்னை திரும்பினார். மறுபிறவி எடுத்து வந்த ரஜினியை சென்னை ஏர்போர்ட் சென்று வரவேற்றனர் ரசிகர்கள். ரஜினிகாந்த்தும் உற்சாகமாக வீட்டுக்கு சென்றார். அதிலிருந்து ஜூலை 13ம் தேதியை மறுபிறவி நாளாக ரஜினி ரசிகர்கள் நினைக்கிறார்கள். அந்தவகையில் நேற்று அந்த நாளை நினைவு கூர்ந்து 2011 போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு ரஜினி ரசிகர்கள் பீல் பண்ணினார்கள்.
கடந்த 14 ஆண்டுகளாக ரஜினியும் உடல்நலத்தில் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்தி, சிகரெட்டை விட்டு சினிமாவில் நடித்து வருகிறார். பல மேடைகளில் உடல்நலம் சார்ந்த விஷயங்களை தீவிரமாக பேசி வருகிறார்.
இதற்கிடையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த், சூப்பர்ஸ்டாரின் 50வது சினிமா கொண்டாடத்தை முன்னிட்டு, அவர் பட சம்பந்தப்பட்ட பழைய போஸ்டர்கள், கட்டுரைகள், டிக்கெட்டுகள், சினிமா தொடர்பான பொருட்களை எனக்கு ரசிகர்கள் அனுப்பி வருகிறார்கள். அதை பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறேன். விரைவில் அதை கொண்டு கண்காட்சி அமைக்கப்படும். ரசிகர்களுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.