ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‛கூலி' படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிஸினஸ் குறித்த சில தகவல்கள் இப்போது கசிந்துள்ளது. இந்த படத்தை உலகம் முழுக்க 100க்கும் அதிகமான நாடுகளில் வெளியிட வேலைகள் நடக்கின்றன. தென்னிந்திய மொழிகளில் ஜூனியர் என்டிஆர் நடித்த ‛தேவரா' தான் 90 நாடுகளில் வெளியாகி சாதனை படைத்த முதல் படம். அதை கூலி முறியடிக்கும் என தெரிகிறது.
அது மட்டுமல்ல, படத்தின் வசூல் ஆயிரம் கோடியை தொட வேண்டும். ஆயிரம் கோடியை தொட்ட முதல் தமிழ் படம் என்ற சாதனையை கூலி படைக்க வேண்டும் என்று ரஜினி தரப்பும், படக்குழுவும் விரும்புகிறதாம். அதனால், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீன்களில் உலகம் முழுக்க படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறதாம்.
தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஸ்கிரீன்களில் 90 சதவீதம் கூலி ஆக்கிரமிக்கும் என தெரிகிறது. படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிட வாய்ப்பு. அதனால், ஆகஸ்ட் 14 மற்றும் அடுத்த வாரங்களில் புது தமிழ் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். கூலியுடன் போட்டி போட வேண்டாம். நாம் கொஞ்சம் லேட்டாக வருவோம் என பின்வாங்குகிறார்கள்.
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் 50வது ஆண்டில் இந்த படம் வெளியாக இருப்பதால், இப்படிப்பட்ட சாதனைகளை குறி வைத்து பக்கா பிஸினஸ் முன்னேற்பாடுகள் நடக்கிறதாம்.




