கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' | அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | 'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை |
1940களில் எம் கே தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா என்ற இருபெரும் நடிகர்களின் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த காலகட்டங்களில், நடிகர் டி ஆர் மகாலிங்கத்தின் திரைப்படங்களும் இடையிடையே வந்து அவர்களின் திரைப்படங்களுக்கு இணையான வெற்றியை பதிவு செய்து கொண்டிருந்தது. அதேபோல் 1950, 60 மற்றும் 70களில் எம் ஜி ஆர், சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்களின் திரைப்படங்களுக்கு இணையான வெற்றியை பதிவு செய்ய தவறியதில்லை நடிகர் ஜெமினிகணேசனின் திரைப்படங்கள்.
இந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கோலோச்சியிருந்த 1980களில் எவ்வித ஆர்பாட்டமுமின்றி அவர்களின் திரைப்படங்களுக்கு இணையான அல்லது அவர்களின் திரைப்பட வசூலை விட அதிக வசூல் சாதனை செய்து, வெள்ளி விழா திரைப்படங்களாக சத்தமின்றி தந்து கொண்டிருந்தவர்தான் 'வெள்ளி விழா நாயகன்' என திரையுலகினரால் அழைக்கப்படும் நடிகர் 'மைக்' மோகன். இவர் கையில் 'மைக்' பிடித்தவாறு போஸ்டர் ஒட்டப்பட்டுவிட்டால் அந்தத் திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படம் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வந்தது அப்போது.
“நெஞ்சத்தைக் கிள்ளாதே”, “கிளிஞ்சல்கள்”, “பயணங்கள் முடிவதில்லை”, “விதி” என தொடர் வெள்ளி விழா திரைப்படங்களைத் தந்து கொண்டிருந்த இந்த முன்னணி நாயகன், திடீரென ஒரு கில்லர் கதாபாத்திரம் ஏற்று நடித்து வெளியிட்ட திரைப்படம்தான் இந்த “நூறாவது நாள்”. இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றின. “விழியிலே மணி விழியில் மவுன மொழி பேசும் அன்னம்”, “உலகம் முழுதும் பழைய ராத்திரி” என்ற இரண்டு பாடல்கள் நடிகர் மோகனுக்கு கொடுக்கப்பட்டு, ஒரு நாயகனுக்குரிய அங்கீகாரம் தரப்பட்டிருந்தும், படத்தின் இறுதியில் ஒரு சீரியல் கில்லராக அடையாளப்படுத்தப்பட்டு, ஜெயிலுக்குப் போவது போல்தான் படம் நிறைவடையும்.
விஜயகாந்திற்கு பாடல் காட்சிகள் ஏதும் படத்தில் இல்லை என்றாலும், அவரே படத்தின் நாயகனாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து நேர்மறை கதாபாத்திரங்கள் ஏற்று வெள்ளி விழா திரைப்படங்களாக வழங்கிக் கொண்டிருந்த ஒரு நாயகன், அதே காலகட்டத்தில் தன்னால் இப்படி ஒரு எதிர்மறை கதாபாத்திரம் ஏற்று நடித்து, அதிலும் தனது தனித்துவமிக்க முத்திரை பதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய நடிகர் மோகனின் இந்த “நூறாவது நாள்”, 1984ம் ஆண்டு வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்று, அவரது திரைப்பயணம் என்ற மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட மற்றொரு வைரக்கல்லாக மின்னியது என்பதில் எந்த ஐயமும் இல்லை.