பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

'சுழல் - தி வொர்டெக்ஸ்ட்' என்ற இணைய தொடரில் நடித்த எப்.ஜே., நடிக்கும் படம் 'தி பிளாக் பைபிள்'. சாந்தினி தமிழரசன், ஸ்ரீஜா ரவி, மோனா பெத்ரா மற்றும் அய்ரா பாலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். எப்பிஎஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பாலாஜி ராமசாமி ஒளிப்பதிவு செய்ய, அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் மணிவண்ணன் கூறும் போது "தமிழ்நாடு, கேரள எல்லையில் அமைந்துள்ள அஸ்தினாபுரம் என்ற கற்பனை கிராமத்தில் கதை நடக்கிறது. காலனித்துவ கால மாந்திரீகம் மற்றும் சூனியத்தால் நீண்ட காலமாக சபிக்கப்பட்ட ஒரு நிலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க துடிக்கும் இரண்டு பெண்கள் அலிஷா மற்றும் அவரது தாயாரைச் சுற்றி கதை சுழல்கிறது.
ஆனால் அவர்கள் தப்பி ஓட முயற்சிக்கும்போது, அவர்கள் நினைத்ததை விட ஆழமான, ஆபத்தான ஒரு இடத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அலிஷாவின் காதலன் மட்டுமே அவர்களுடன் நிற்கும் நிலையில், மூவரும் அமைதிக்கு பின் இருக்கும் பயங்கரங்களையும், அதில் இருந்து தப்பிக்க மறுக்கும் சாபத்தையும் எதிர்கொள்ள வேண்டும். அது எப்படி செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை" என்றார்.




