இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா, 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். பைவ் ஸ்டார் படத்தில் நடித்த கிருஷ்ண குமார் இயக்குகிறார். பலரும் ருத்ரா, விஷ்ணு விஷாலின் சொந்த தம்பி என நினைத்துக் கொண்டிருக்க, இன்று சென்னையில் நடந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில் ருத்ரா தனது பெரியப்பா மகன், தங்கள் குடும்பம் கூட்டு குடும்பம் என்று சொல்லிவிட்டு, குடும்பம் குறித்த பல விஷயங்களை
சொன்னார்.
விஷ்ணு விஷால் பேசுகையில், தனது அப்பாவும், பெரியப்பாவும் சின்ன வயதில் இருந்தே சினிமா ரசிகர்கள். குறிப்பாக பெரியப்பா சினிமா மீது அதிக ஆர்வம் உள்ளவர். ஆனால், சின்ன வயதில் அவர்களுக்கு படம் பார்க்க பணம் இருக்காது. ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு பாதி படத்தை அண்ணனும், மீதி படத்தை தம்பியும் பார்த்து, பின்னர் தங்களுக்குள் கதையை விவரித்துக் கொள்வார்கள். அப்பா ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதற்காக, பெரியப்பா கஷ்டப்பட்டார். தான் படிக்காமல் பல வேலைகளை செய்து அப்பாவை படிக்க வைத்தார்.
அப்பா ஒரு பெண்ணை காதலித்தார். குடும்பத்தில் மனைவியால் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் தங்கையை பெரியப்பா மணம் முடித்தார். இரண்டுபேரும் இன்னமும் கூட்டு குடும்பமாக இருக்கிறார்கள். பெரியப்பா சில படங்களில் சின்ன ரோலில் நடித்து இருக்கிறார்.
நான் கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டேன். ஒரு விபத்தால் அது நடக்கவில்லை. அப்போது அவர் தான் சினிமாவில் நான் நடிக்க காரணமாக இருந்தார். அவரை நான் டாடி என்றுதான் அழைப்பேன். தம்பி ருத்ரா இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக இருந்துவிட்டு இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் என்றார்.
இந்த விழாவில் தனது அப்பா, பெரியப்பா, ஹீரோவாகும் தம்பியை விஷ்ணு விஷால் மேடையில் அறிமுகப்படுத்தினார். அப்போது பேச முடியாமல் கண் கலங்கினார் அந்த பெரியப்பா. இந்த நிகழ்வை பார்த்தவர் விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல என்றனர்.