விஷ்ணு விஷால் குடும்ப கதையை சினிமாவாக எடுக்கலாம் போல | விஜய்சேதுபதி மகன் படவிழாவில் விஜய்யின் ஜனநாயகன் இயக்குனர் | ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படம் என்ன ஆயிற்று ? | விஷ்ணு விஷால் அடுத்தடுத்து தயாரிக்கும் 3 படங்கள் | சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி : தனுஷ் தரப்பில் திடீர் எதிர்ப்பு ? | நான் நடிக்க வேண்டிய கதையில் என் மகன் நடிக்கிறார் : விஜய் சேதுபதி | கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய திரிஷா | தமன்னா கை கழுவியதால் புதிய காதலில் விழுந்தாரா விஜய் வர்மா..? | 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் பெண்டாஸ்டிக் போர் | பிளாஷ்பேக் : தணிக்கையில் சிக்கிய பிரபு படம் |
ஜி.ஆர்.லட்சுமணன் எழுதி, தயாரித்து, இயக்கிய படம் 'லாவண்யா'. ஒளிப்பதிவாளர்களான மார்கஸ் பார்ட்லி மற்றும் ஆதி இரானி ஆகியோர் தயாரித்தனர். இரண்டு ஏழைப் பெண்களின் வாழ்க்கையில் வரும் தேவதைகளின் கதை. குமாரி கமலா, வனஜா ஆகியோர் ஏழைப் பெண்களாக நடித்தனர். சூர்யபிரபா நாயகியாக நடித்தார்.
படத்தில் இந்த இருவரின் நடனங்கள் பிரதானமாக இடம் பெற்றது. வழுவூர் ராமையா பிள்ளை, கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை மற்றும் ஹிரலால் ஆகியோர் நடனம் அமைத்தனர். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதினார். எஸ்.வி.வெங்கடராமன் இசையமைத்தார். 'புலிமூட்டை' ராமசாமியும் ஜெயாவும் காமெடி வேடங்களில் நடித்தனர்.
இனிமையான இசை மற்றும் அற்புதமான ஒளிப்பதிவு, நாயகிகளின் நடனம் ஆகியவை இருந்தபோதும் லாவண்யா வெற்றி பெறவில்லை. என்றாலும் படத்தில் இடம்பெற்ற நடனங்கள் ஓரளவிற்கு படத்தை காப்பாற்றியது என்பார்கள்.