தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? |
தெலுங்கில் உருவாகி பான் இந்திய திரைப்படமாக நேற்று (ஜூன் 27) கண்ணப்பா திரைப்படம் வெளியாகி உள்ளது.. கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்க, படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இதை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கியுள்ளார். நடிகரும் விஷ்ணு மஞ்சுவின் தந்தையுமான மோகன்பாபு இந்த படத்தை தயாரித்து ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருகிறார். நேற்று வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பிருந்தே நடிகர் விஷ்ணு மஞ்சுவிற்கும், அவரது சகோதரர் மனோஜ் மஞ்சுவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, அதன் நீட்சியாக மோகன்பாபுவுக்கும் மனோஜ் மஞ்சுவுக்கும் ஏற்பட்ட பிரச்னை, அதன் காரணமாக போலீஸ் ஸ்டேஷன் வரை இரு தரப்பினரும் மாறிமாறி புகார் கொடுத்தது என காரசாரமான விஷயங்கள் நடந்தன. இதற்கிடையே இந்த படத்தின் முக்கியமான காட்சி அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதன் பின்னணியில் கூட மனோஜ் மஞ்சுவின் ஆட்கள் இருக்கிறார்கள் என்று விஷ்ணு மஞ்சு குற்றம் சாட்டி இருந்தார்.
இப்படி இரு தரப்பினரும் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த நிலையில் கண்ணப்பா, திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்த்தார் மனோஜ் மஞ்சு. படத்தை பார்த்துவிட்டு, “படம் நான் எதிர்பார்த்ததை விட ஆயிரம் மடங்கு நன்றாக வந்திருக்கிறது. இந்த அளவிற்கு அவர் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கண்ணப்பா படக் குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தன் சகோதரர் விஷ்ணு மஞ்சுவின் பெயரை குறிப்பிடாமலேயே படத்திற்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரியப்படுத்தியுள்ளார் மனோஜ் மஞ்சு.