ஜீ 5 ஓடிடி மற்றும் ஜீ 5 தமிழ் டிவியி ஒளிபரப்பாகும் சூரியின் மாமன் | என் படங்களில் அஞ்சலியை தொடர்வது ஏன்? : இயக்குனர் ராம் | கில்லர் எனது கனவுப்படம் : மெக்சிகோவில் படப்பிடிப்பு நடத்தும் எஸ்.ஜே.சூர்யா | பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி | ஜிஎஸ்டி சோதனை பற்றி விஷ்ணு மஞ்சு விளக்கம் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கே, மதுரம் ஜோடிக்கு போட்டியாக வந்த காமெடி ஜோடி | கிரேஸ் ஆண்டனிக்காக 5 மாதங்கள் காத்திருந்த ராம் | ஆஸ்கர் விருது விழா : கமலுக்கு அழைப்பு | நான் கலெக்டர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார் : பட்டிமன்ற பேச்சாளர் ராஜா |
‛எட்டு தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் நடித்துள்ள படம் ‛3bhk'. இதன் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் ரவி மோகன் பேசியதாவது...
இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். பொதுவாக ஒரு ஹீரோ படத்தை மற்ற ஹீரோவுக்கு காண்பிக்க மாட்டார்கள். நானும் சித்தார்த்தும் நண்பர்கள். அவர் தெலுங்கில் நடித்த பொம்மரிலுவின் தமிழ் ரீமேக்கில் நான் நடித்தேன். இன்னமும் நாங்கள் நண்பர்கள். அவர் தவறான படங்களில் நடித்தது இல்லை. நான் கோமாளி படத்தில் ஸ்கூல் ரோலில் நடித்துவிட்டேன். இதில் சித்தார்த் பள்ளி மாணவராக நடித்துள்ளார். அப்படி நடிப்பது கஷ்டம்.
நான் குட் நைட் படம் பார்த்தேன். அதில் மீதா சிறப்பாக நடித்தார். இந்த படத்தில் அவர் இருக்கிறார். இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் சிறப்பான இசை கொடுத்து இருக்கிறார். சரத்குமார், தேவயானியும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். நானும் தேவயானி மேடமும் ஜீனி படத்தில் நடித்து இருக்கிறோம். இந்த படம் சொந்த வீடு கனவு பற்றி பேசுகிறது. நான் வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சின்ன வயதில் இருந்தே சொந்த வீடுதான். ஆனால் இப்போது வாடகை வீட்டில் வசிக்கிறேன்'' என உருக்கமாக பேசினார்.