இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க அவர் தயாராகி வருகிறார். சமீபத்தில் கோவையில் ரோடு ஷோ நடத்தினார் விஜய். அப்போது அவரைக் காண ஏராளமான மக்கள் திரண்டார்கள். அதையடுத்து ஜனநாயகன் படப்பிடிப்புக்கு செல்லும்போது மதுரை விமான நிலையத்தில் விஜய் இறங்கிய போதும் ஏராளமான தொண்டர்கள் அவரை காண படை எடுத்தார்கள்.
இந்நிலையில் அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கிய பகுதிகளின் முதல் கட்டமாக ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக காவிரி டெல்டா பகுதி மற்றும் கோவை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளை தேர்வு செய்திருக்கிறார் விஜய். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியை தொடங்கி அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணம் செய்து 100 இடங்களில் மக்கள் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.