டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தங்கலான் படத்திற்கு பிறகு தற்போது தமிழில் கார்த்தியுடன் சர்தார் 2 படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தெலுங்கில் பிரபாஸ் உடன் தி ராஜா சாப், மலையாளத்தில் மோகன்லாலுடன் ஹிருதயபூர்வம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா மோகனன் தொடர்ந்து தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களை சுட்டிக்காட்டி, ‛‛போட்டோ சூட், மாடலிங்கில் போடும் உழைப்பை கூட நீங்கள் சினிமாவில் போடுவதில்லையே என்ன காரணம்?'' என்று அவரிடத்தில் ஒரு ரசிகர் கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு மாளவிகா மோகனன், ‛‛நான் நடித்த தங்கலான் படத்தில் போட்ட உழைப்பை நீங்கள் பார்க்கவில்லையா? அந்த படத்தில் உடல் ரீதியாகவும் நான் கஷ்டப்பட்டு நடித்தேன். நான் நடித்த படங்களில் என்னுடைய உழைப்பை பார்க்காமல் இப்படி கமெண்ட் கொடுக்கும் உங்களிடத்தில் நான் என்ன சொல்வது'' என்று பதில் கொடுத்து இருக்கிறார்.




