மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடித்து இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் 'தக் லைப்'. இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவரைப் பற்றிப் பேசும் போது தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று பேசினார் கமல்ஹாசன்.
அது கன்னட அமைப்புகளின் கோபத்தைத் தூண்டியது. கமல்ஹாசன் பேசியதற்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் 'தக் லைப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்றார்கள். கன்னட சினிமா வர்த்தக சபையும் படத்தை வெளியிட தடை விதிக்கிறோம் என்றார்கள்.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார். ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வெளியீடு தடை குறித்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்சார் பெற்ற படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி படத்தைத் திரையிட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று பெங்களூருவில் கர்நாடக மாநில துணை முதல்வர், “கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். கன்னட ஆதரவு அமைப்புகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் நமது வரம்புகளை மீறக் கூடாது, அமைதியாக இருக்க வேண்டும். யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. நமது மாநிலம் அமைதியை விரும்பும் மாநிலம்,” என்று பேசியுள்ளார்.