தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார். சினிமா, கார் ரேஸ் இரண்டிலும் ஒரே நேரத்தில் கால் வைக்காமல், 6 மாதம் சினிமா, 6 மாதம் கார் ரேஸ் என பிளான் போட்டு காய் நகர்த்தி வருகிறார் அஜித். அதற்கேற்ப தனது அடுத்த படத்தை அக்டோபர், நவம்பரில் துவக்கி, மே, ஜூனில் வெளியிட உள்ளதாக அஜித் சமீபத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையே அஜித்தின் 64வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற பேச்சு கோலிவுட்டில் பேசப்பட்ட வந்தநிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் என சொல்கின்றனர். நாயகியாக கேஜிஎப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளாராம். படம் பற்றிய அறிவிப்பு, அஜித்தின் கார் ரேஸ் தொடர் முடிந்ததும் வெளியாகும் என்கின்றனர்.
சமீபத்தில் அஜித் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: முதன்முதலில் நான் நடிக்க வந்தபோது தமிழ் சரியாக பேசவில்லை. எனது உச்சரிப்பில் ஆங்கில மொழியின் சாயல் அதிகமாக இருந்தது. இதற்கு எழுந்த விமர்சனங்களுக்கு பிறகு எனது பலவீனங்களை சரி செய்ய பயிற்சி எடுத்தேன். அதை சரி செய்தேன். நான் தற்போது அடைந்திருக்கும் நிலைமை அனைவருக்குமே தெரியும். சினிமா போலத்தான் கார் ரேஸிங்கிலும் காயங்கள் உண்டாகும். ஆனால், பயிற்சி எடுப்பேன், விரைவாக கற்றுக்கொள்வேன்.
எனக்கு 54 வயதாகிறது. எனினும் என்னால் முடிந்தவரை கார் ரேஸை தொடர விரும்புகிறேன். கடவுளின் கருணையால் எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது. பெரிய அளவில் காயங்களின்றி உடன் பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒத்துழைப்பால் சிறப்பாக இருக்கிறேன். சில ரேஸர்கள் 60 வயதை தாண்டி ரேஸிங்கில் ஈடுபட்டதை பார்த்திருக்கிறேன். அதேபோல் நானும் அந்த வயது வரை ரேஸிங்கில் ஈடுபடலாம். அதனால், தற்போது ரேஸிங்கில் ஈடுபடுகிறேன். கார் ரேஸிங்கில் "அஜித்குமார் கார் ரேஸிங்" நிறுவனத்தை ஈடு இணையற்ற ஒன்றாக மாற்றுவதே தனது விருப்பம். என்னை பற்றி மற்றவர்களின் விமர்சனங்களால் என்னை நானே மதிப்பிட்டுக்கொள்ள மாட்டேன். நான் வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன். எனது கடைசி காலத்தில் நான் முயற்சித்தேன், நான் ஏதோ செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.