ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
“பராசக்தி முதல் படையப்பா வரை” தமிழ் சினிமாவின் அடையாளமாக, தமிழ் திரைக்கலைஞர்களின் ஆதர்ச நாயகனாக, நடிக்க விரும்பும் இளம் தலைமுறையினருக்கு ஒரு உந்து சக்தியாக இன்றும் இருந்து வருபவர்தான் 'நடிகர் திலகம்' சிவாஜிகணேசன். இவர் ஏற்று நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனும் அளவிற்கு வேடங்கள் பல தரித்து, கலையுலகிற்கு பாடங்களாக தந்து விட்டுச் சென்ற கலைப் படைப்புகள் ஏராளம்! ஏராளம்!!.
தென்னிந்திய மொழிகளில் ஏறக்குறைய 288 திரைப்படங்கள் வரை நடித்திருக்கும் இவர், அவற்றில் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை மட்டுமே 250 என்பது அவரது அசாத்திய சாதனைக்கு ஒரு சான்று. இவர் நடிப்பில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களிலும் இடம் பெற்ற பெரும்பான்மையான பாடல்களுக்கு இவரது குரலாகவே இருந்து பின்னணி பாடி சிறப்பித்திருந்தவர்தான் 'இசையரசர்' டி எம் சவுந்தரராஜன். அவ்வாறு நடிகர் திலகத்திற்காக டி எம் சவுந்தரராஜன் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களில் சிறப்பு மிக்க ஒரு பாடலைப் பற்றித்தான் நாம் இங்கே காண இருக்கின்றோம்.
1972ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் கலையுலகப் பயணத்தில் ஒரு சிறப்பு மிக்க ஆண்டாகவே எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆண்டில் சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கை 7. அவற்றில் ஆறு திரைப்படங்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்த திரைப்படங்களாக அமைந்திருந்தது. “ராஜா”, “ஞான ஒளி”, “பட்டிக்காடா பட்டணமா”, “தர்மம் எங்கே”, “தவப்புதல்வன்”, “வசந்த மாளிகை”, “நீதி” ஆகிய இந்த 7 திரைப்படங்களில் “தர்மம் எங்கே” தவிர்த்து மற்ற ஆறு திரைப்படங்களும் அமோக வெற்றியைப் பெற்றிருந்தன. குறிப்பாக விக்டர் ஹ்யுகோவின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இவரது “ஞான ஒளி” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் திரையிசை ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றான 'தேவனே என்னைப் பாருங்கள்” என்ற பாடல் ஒரு சிறப்பு மிக்க பாடலாக எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்.
பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அபார நடிப்பு ஒருபுறம் என்றால், தன் குரலால் நடிகர் திலகமாகவே வாழ்ந்து காட்டியிருந்தார் பின்னணிப் பாடகர் டி எம் சவுந்தரராஜன் மறுபுறம். முதலில் இந்தப் பாடலின் இடையே வரும் வசனங்களான “ஓ… மை லார்ட்! பார்டன் மீ”, “உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய்விட்டன. இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே” போன்ற ஒரு சில வசனங்களை சிவாஜி தனது குரலில் பேச மறுப்பு தெரிவிக்க, பின்னர் பாடல் பதிவின்போது, இசைக்குழுவில் உள்ள மிமிக்ரி கலைஞர்களை வைத்து சிவாஜி போல் பேச வைத்து முயற்சித்தும் பலனளிக்காமல் போக, இறுதியாக பின்னணிப் பாடகர் டி எம் சவுந்தரராஜனையே சிவாஜிபோல் பேச வைத்து பாடலை பதிவு செய்து விடலாம் என யோசித்து, டி எம் சௌந்தரராஜனிடம் சொல்ல, அதன்படி டி எம் சௌந்தரராஜன் சிவாஜியிடம் இந்த வசனத்தை நீங்கள் எப்படி பேசுவீர்கள்? என பேச வைத்துக் கேட்டு, அதன் பின்னர் அந்தப் பாடலின் இடையிடையே வரும் வசனங்களையும் சிவாஜி போலவே பேசி பாடலைப் பாடி, சிவாஜியின் குரலாகவே வாழ்ந்து, அந்தப் பாடலை ஒரு காவியப் பாடலாக்கித் தந்திருப்பார் டி எம் சவுந்தரராஜன்.