சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

‛விக்ரம்' படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்த ‛இந்தியன்-2, தக்லைப்' என்ற இரண்டு படங்களுமே தோல்வி அடைந்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க இருந்த தனது 237வது படத்தை கமல்ஹாசன் கிடப்பில் போட்டு விட்டதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
இந்நிலையில் அது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரத்தை அணுகி விசாரித்த போது, ஒரு புதிய தகவல் கிடைத்தது. அதாவது, தக்லைப் படத்தை அடுத்து அன்பறிவ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்துக்காக கமல்ஹாசன் பெரிய அளவில் தலையில் முடி வளர்த்து புதிய கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.