டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் பெரும்பாலான கதாநாயகிகள் மலையாள திரையுலகில் இருந்து இங்கே வந்தவர்கள் தான். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் வரவாக நடிகை பிரியம்வதா கிருஷ்ணனை தமிழுக்கு அழைத்து வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ‛நரிவேட்ட' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் இந்த பிரியம்வதா. நடிகர் டொவினோ தாமஸ், சேரன் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்த இந்த படம் கவனிக்கத்தக்க வெற்றியும் பெற்றது
இதற்கு முன்னதாக அவர் ‛ரோஷாக், சம்ஷயம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் நரிவேட்ட படத்தில் அவரது நடிப்பும் அழகும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற மின்னல்வல என்கிற பாடல் பிரியம்வதாவுக்கு அதிகம் ரசிகர்களை தேடி தந்துள்ளது. இதனால் சில தமிழ் இயக்குனர்கள் பிரியம்வதாவை தமிழுக்கு அழைத்து வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.




