சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
2025ம் ஆண்டு இதுவரையிலான தமிழ் சினிமா படங்களின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள், பிரம்மாண்டமான படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. சில சிறிய பட்ஜெட் படங்கள் எதிர்பாராத பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
இந்த வருடத்தில் அடுத்து வெளியாக உள்ள சில பெரிய படங்கள் எப்படி இருக்கப் போகிறதோ என்ற அச்சம் திரையுலகினரிடம் அதிகமாக உள்ளது. அடுத்த வாரம் ஜுன் 20ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படம் வெளியாக இருக்கிறது. அந்தப் படம் தங்களைக் காப்பாற்றுமா என அவர்கள் யோசனையில் இருக்கிறார்கள்.
மேலும், அடுத்த வாரம் சில முக்கிய படங்களின் அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலரது பிறந்தநாள் அன்று வருவதே அதற்குக் காரணம். ஜுன் 20ம் தேதி இயக்குனரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி பிறந்தநாள். அதனால், அன்றைய தினம் அவரது இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 45வது படத்தின் அப்டேட் வரலாம்.
அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தை இயக்கி வரும் நெல்சன் பிறந்தநாள் ஜுன் 21. அதனால் கண்டிப்பாக ஒரு அப்டேட் இருக்கும். ஜுன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள். அன்று அவர் நடிக்கும் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தின் ஏதோ ஒரு முன்னோட்ட வீடியோ வெளியாகும் என்று ஏற்கெனவே தகவல் உள்ளது.
அனைத்துமே வீடியோக்களாக இருந்தால் வியூஸ், லைக்ஸ் என போட்டியும், சர்ச்சையும் உறுதி.