விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
திருவிதாங்கூர் உயர் நீதிமன்றம் ஒரு சமஸ்தானமாக இருந்தபோது அதன் நீதிபதியின் மகனாக இருந்தார் ஜோசப் தளியத். பழமைவாத குடும்பத்திலிருந்து பிரிந்து, திரைப்படங்களை உருவாக்கும் கனவுகளுடன் சென்னைக்கு வந்தார். அப்போது தென்னிந்திய திரைப்பட முன்னோடியாக இருந்த எஸ். சவுந்தரராஜன் நடத்தி வந்த 'தமிழ்நாடு டாக்கீஸ்' நிறுவனத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
அவரிடம் சினிமா கற்ற பிறகு 'சிட்டாடல் பிலிம் கார்பரேஷன்' என்ற புதிய நிறுவனத்தை சொந்தமாக உருவாக்கி அதன் மூலம் பல படங்களை இயக்கினார். அவர் தயாரித்த, இயக்கிய படங்களில் எஸ்.சவுந்தரராஜன் உதவியாளராக பணியாற்றினார். இதற்கிடையில் சவுந்தரராஜன் 'பங்கஜவல்லி' என்ற படத்தை இயக்கி, தயாரித்துள்ளார் என்பதை தவிர அவரைப் பற்றி வேறு தகவல்கள் எதுவும் இல்லை.
'பங்கஜவல்லி' படத்தில் பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி, குமாரி ருக்மகணி, நடித்துள்ளனர். பாபநாசம் சிவன் இசை அமைத்துள்ளார். 1947ம் ஆண்டு வெளியாகி உள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு 'சென்னை மாகாணம்' என்று இருந்ததை சவுந்தர பாண்டியனார் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, திராவிட இயக்ககத் தலைவர்கள் போராடித்தான் 1967ம் ஆண்டு தமிழ்நாடு என்ற பெயரை பெற்றனர். ஆனால் அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே தனது நிறுவனத்திற்கு 'தமிழ்நாடு டாக்கீஸ்' என்று பெயர் வைத்து அந்த சொல்லை அறிமுகப்படுத்தியர் எஸ்.சவுந்தரராஜன். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் போனது மிகப்பெரிய வரலாற்று இருட்டடிப்பு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.