இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' |
சேரன் நடித்த 'தமிழ்க்குடிமகன்' படத்தை இயக்கிய இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் புதிய படம் 'பரமசிவன் பாத்திமா'.இந்த படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். சாயா தேவி நாயகியாக நடித்துள்ளார்.எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் கன்னியாகுமரி பகுதியில் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கும் மதம் மாறாத இந்துக்களுக்கும் இடையிலான மோதலைச் சொல்லும் கதையாக உருவாகியுள்ளது. இந்த படம் கிறிஸ்தவ மக்களை புண்படுத்துவதாக ஏற்கனவே புகார் வந்துள்ள நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு சான்றிதழ் தர மறுத்து விட்டனர்.
பின்னர் தயாரிப்பு தரப்பு படத்தை மறு தணிக்கைக்கு கொண்டு சென்றது. நேற்று முன்தினம் படத்தைப் பார்த்த மறு தணிக்கை குழுவினர் ஒரு சில காட்சிகள் வசனங்களை நீக்க சொல்லி 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது. இதன் மூலம் படம் வருகிற 6ம் தேதி வெளிவருவது உறுதியாகி உள்ளது.