படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
திருவிதாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் நடனம் மட்டுமே ஆடிவந்தனர் லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள். இவர்கள் நடனத்திற்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்ததால் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் இவர்களது நாட்டியம் படங்களில் இடம்பெற்றது. திருவிதாங்கூர் சகோதரிகளின் நாட்டியம் இடம்பெற்ற படம் என்று விளம்பரமும் செய்யப்பட்டது.
சகோதரிகள் மூன்று பேருக்குமே படத்தில் நடிக்கும் ஆசை இருந்தாலும் அது அவர்களுக்கு வாய்ப்பாக அமையவில்லை; தொடர்ந்து நடனம் ஆடவே அழைக்கப்பட்டார்கள். இந்த நிலையில் 1950ம் ஆண்டு வெளிவந்த 'ஏழை படும் பாடு' படத்தில் பத்மினியும் ராகினியும் ஹீரோயின் ஆனார்கள். லலிதா - அஞ்சலா என்ற கேரக்டரிலும், பத்மினி - லட்சுமி என்ற கேரக்டரிலும் நடித்தனர். வி நாகையா, சேருகளத்தூர் சாமா, டி.எஸ். பாலையா, வி. கோபாலகிருஷ்ணன், டி.எஸ். துரைராஜ் மற்றும் 'லக்ஸ் சோப் பியூட்டி' குமாரி என். ராஜம். ஆகியோரும் நடித்திருந்தனர். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையமைத்தார்.
திருந்தி வாழ நினைக்கும் ஒரு திருடனுக்கும் கொடூர போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான கதை. ஜாபர்ட் என்ற அந்த போலீஸ் கேரக்டரில் சீதாராமன் நடித்திருந்தார். அவரது நெகட்டிவ் கேரக்டர் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் பின்னர் அவர் ஜாபர்ட் சீதாராமன் என்று அழைக்கப்பட்டார்.