ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் |

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி நடித்து வரும் மாடல் அழகி ஸ்ராவணி ஷெட்டி. சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கும் இவர் தற்போது 'யமன்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
ஜகன்நாதா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜகதீஷ் அம்மாஞ்சி கதாநாயகனாக நடித்து அவரே இப்படத்தை இயக்கியும் இருக்கிறார். “தர்மோ ரக்ஷதி ரக்ஷித” என்பது இப்படத்தின் டேக்லைன்(தர்மம் தன்னை காக்கிறவனை அந்த தர்மம் காக்கும் - தர்மத்தின் தலைவன்). புராணத் திரில்லர் படமாக இது உருவாகி வருகிறது.
படம் குறித்து இயக்குனர் ஜெகதீஷ் கூறியதாவது: கமர்சியல், காதல் அல்லது ஆக்ஷன் படங்களை விட, கான்செப்ட் சார்ந்த திரைப்படங்களைத் தான் இன்றைய ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதன் அடிப்படையில், புராணம், சஸ்பென்ஸ், குற்றவியல் மற்றும் திரில்லர் வகை சார்ந்த புதிய வகை படமாக தயாராகி உள்ளது.
நகரத்தில் பெண்கள் காணாமல் போவதைப் பற்றி பேசும் சுவாரசியமான இந்தக் கதைக்களத்தில், “யமன்” வேடமணிந்து நடிக்கும் ஒருவருடன் இந்த சம்பவங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று ஆடியன்சை சந்தேகம் கொள்ள வைக்கும். நரகத்தில் கிடைக்கும் தண்டனையை, யமன் பூமியில் கொண்டு வந்து வழங்குவதை போல படம் இருக்கும்.
இந்த திரைப்படம் ஒரு புதுமையான, சிந்திக்க வைக்கும் முயற்சியாக அமையும். டீசரில் விஷ்ணு ரெட்டி வங்காவின் சினிமாடோகிராபியும், பவானி ராகேஷின் பின்னணி இசையும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. தற்போது இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது, என்றார்.