தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணசித்திர மற்றும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. பெரும்பாலான முன்னனி நடிகர்களின் படங்களில் யோகி பாபு ஒரு காட்சியிலாவது இடம் பெறுவார். சமீபத்தில் யோகி பாபு அளித்த பேட்டி ஒன்றில் சில சர்ப்ரைஸ் ஆன விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், "சுந்தர்.சி. ரொம்பவே கஷ்டப்பட்டு என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளார். எனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என ஐடியா கிடையாது. ஆனால், அடிப்படையில் நான் வசனங்களை எழுதுவேன். எழுத்தாளர் சங்கத்தில் கடந்த பத்து வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். அதனால் கதைகள் எழுதி தர தயார். ஆனால், படங்களை இயக்க விருப்பமில்லை. சினிமாவில் உதவி இயக்குநர் ஆகணும்னு தான் விரும்பினேன். ராம்பாலா சார் தான் என்னை நடிகனாக மாற்றினார்" என தெரிவித்தார்.