ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
தமிழ் இயக்குனரான அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியானது. படத்தில் நடிக்க உள்ள மற்ற நட்சத்திரங்கள், கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் இந்தப் படம் பற்றிய அப்டேட் என ஏதாவது ஒன்று டோலிவுட் வட்டாரங்களில் இருந்து வெளியாகி வருகிறது.
யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பதில் ஆரம்பித்து, கடைசியாக ஆறு கதாநாயகிகள் நடிக்க உள்ளார்கள் என்பது வரை அப்டேட்கள் வந்தன. தற்போது புதிய அப்டேட் ஆக, இப்படத்திற்காக இரண்டு தலைப்புகளை பரிசீலனையில் வைத்துள்ளார்களாம். ஒன்று, 'ஐகான்', மற்றொன்று 'சூப்பர் ஹீரோ' என்று தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுனை 'ஐகான் ஸ்டார்' என்று அவரது ரசிகர்கள் அழைப்பதால் அதையே பெயராக வைக்கலாமா என யோசிக்கிறார்களாம். 'சூப்பர் ஹீரோ' தலைப்பு படத்தின் கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருக்குமாம். இப்படியே அப்டேட்கள் வந்து கொண்டிருந்தால் சீக்கிரமே அதிகாரப்பூர்வமாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.