துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
சென்னையைச் சேர்ந்த நடிகையான சமந்தா, தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்ததால் ஐதராபாத்திலேயே சொந்த வீடு வாங்கி செட்டிலானவர். பின்னர், தன்னுடைய முதல் தெலுங்குப் பட ஹீரோவான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். சமந்தாவுக்கும், அவர் நடித்த வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் நிடிமொரு என்பவருக்கும் காதல் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகின. இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா சமூக வலைத்தளங்களில் வெளியிடவே அதைப் பலரும் உண்மை என நம்பினார்.
இதனிடையே, அவர்கள் இருவரும் ஒன்றாக வசிப்பதற்காக வீடு தேடிக் கொண்டிருப்பதாகவும் கூட செய்திகள் பரவின. சமந்தாவின் மேனேஜர் அந்த காதல் விவகாரம் வெறும் வதந்தி தான் என சொன்னதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ராஜ் நிடிமொரு, ஷியாமலி என்ற சினிமா உதவி இயக்குனரை ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டவர். அவர்கள் பிரிந்து வாழ்கிறார்களா அல்லது விவகாரத்து பெற்றுவிட்டார்களா என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் ஷியாமலி சமூக வலைத்தளத்தில், “என்னைப் பற்றி நினைக்கும், என்னைப் பார்க்கும், என்னைப் பற்றிக் கேட்கும், என்னுடன் பேசும், என்னைப் பற்றிப் பேசும், என்னைப் பற்றிப் படிக்கும், எழுதும், இன்று என்னைச் சந்திக்கும் அனைவருக்கும் நான் அன்பையும், வாழ்த்துகளையும் அனுப்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதுவும் சேர்ந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஷியாமலி பதிவில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் என்னைப் பற்றி என்ன வேணாலும் பேசுங்க, உங்களுக்கு என் வாழ்த்துகள் என அதை கடந்து போவதையே இப்படி குறிப்பிட்டுள்ளார்.