மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
கடந்த 2023ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கூலி படத்தை முடித்து விட்ட ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கோழிக்கோடு அருகே உள்ள செருவன்நூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் இங்கே படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநில சுற்றுலா துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸ் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் வருகை தந்து மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்துள்ளார். ரஜினி உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அமைச்சர் முகமது ரியாஸ், “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என ரஜினியின் பஞ்ச் டயலாக்கையும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் கோழிக்கோடு பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது.