15 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித், சரண் கூட்டணி | 2027ம் ஆண்டில் வெளியாகும் ‛பிச்சைக்காரன் 3' | தமிழில் ரீ-மேக் ஆகிறது தெலுங்கு ‛கோர்ட்' | விஜய் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அமீர் கான் | சூர்யா 46 படம் குறித்து பேசிய வெங்கி அட்லூரி | டீசர் உடன் வெளியான ‛தலைவன் தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி | ஹாலிவுட் ஸ்டைலில் ‛யாதும் அறியான்' பட டீசர் | அரச கட்டளை, என் ஜீவன் பாடுது, லியோ : ஞாயிறு திரைப்படங்கள் | நல்ல நடிகையாகவே இருக்க ஆசை திரை வண்ணக்கனவுகளுடன் வர்ஷினி | தமிழ் ரசிகர்களை நம்பினேன் : 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்து வருகிறது. சுமார் ஒரு வார காலம் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் ரஜினிகாந்த் தங்கியுள்ளார்.
கோழிக்கோடு அருகிலுள்ள ஒரு வீட்டிலும் சுற்று வட்டாரங்களிலும் படப்பிடிப்பு சுமார் ஒரு வார காலத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஹோட்டலிலிருந்து ரஜினிகாந்த் படப்பிடிப்புக்குச் செல்லும் போதும் வரும் போதும், படப்பிடிப்பு தளத்திலும் அவரைப் பார்க்க அங்குள்ள ரசிகர்கள் கூடுகின்றனர். தனது காரின் மேற்கூரையைத் திறந்து அவர்களை நோக்கி ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் கையசைக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.