இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி |
சேலம் : 'திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி, நடிகர்கள் சந்தானம், ஆர்யா பாடல் உருவாக்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் பா.ஜ., கிழக்கு மாவட்ட செயலரும், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவருமான அஜீத், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலர் கிருபாகரன் உள்ளிட்ட சிலர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
ஹிந்து மக்களால் புனிதமாக கருதப்படும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று, ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் கோவில். ஹிந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக, டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில், 'கோவிந்தா கோவிந்தா கிசா 47...' என்ற பாடலை பாடி, வெளியிட உள்ளனர்.
அதில், பெருமாளையும், அவர் இருக்கும் புனித தலமான திருப்பதி கோவிலையும் அசிங்கப்படுத்தி, நடிகர்கள் சந்தானம், ஆர்யா உள்ளிட்டோர் பாடல் உருவாக்கியுள்ளனர். அந்த பாடலில், 'பார்க்கிங் காசுக்கு கோவிந்தா, பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்புக்கு கோவிந்தா...' என பெருமாளை அவமதிக்கும் வகையில் பாடி உள்ளனர்.
வாய்மொழியாகவும், செய்கையாகவும், மத வழிபாடு, சடங்குகளை தவறாக சித்தரித்து பாடிய சந்தானம், ஆர்யா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.