விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த படம் ரெட்ரோ. கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. அதையடுத்து சக்ஸஸ் பிரஸ் மீட்டும் நடத்தினார்கள். இந்நிலையில் தொடர்ந்து ரெட்ரோ படம் ஓடும் சில தியேட்டர்களுக்கு தியேட்டர் விசிட் அடித்து வருகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அப்போது அவரிடத்தில் ஒரு ரசிகர், நடிகர் சூர்யா ஏழை மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவி உள்ளிட்ட பல உதவிகளை செய்கிறார். இப்படி உதவிகள் செய்து வரும் அவர் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது மட்டும் ஏன் அவர் மீது பலரும் வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்று அவரிடத்தில் கேள்வி கேட்டார்? அதற்கு கார்த்திக் சுப்பராஜ் பதிலளிக்கையில், சூர்யாவின் பெயரைச் சொன்னதும் எவ்வளவு பவர் வருது பாருங்க. அதனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படக் கூடாது. தூசு மாதிரி தட்டி விட்டுட்டு போயிட்டே இருக்கணும் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.