செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சந்தீப் கிஷனின் பிறந்த நாளில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டார்கள். அதையடுத்து இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படம் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தாலும் , முதல் காப்பி அடிப்படையில் இந்த படத்தை தன்னுடைய ஜேசன் சஞ்சய் ஜோசப் மீடியா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்து கொடுக்கிறாராம் ஜேசன் சஞ்சய். அந்த வகையில் இந்த படத்தில் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவர் உருவெடுத்து இருக்கிறார்.