டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவில் இப்போது பல ஹீரோக்களால் விரும்பப்படுகிற ஹீரோயின் 2 பேர். ஒருவர், ஸ்ரீலீலா, மற்றொருவர் கயாடு லோஹர். தெலுங்கில் முன்னணி ஹீரோயினான ஸ்ரீலீலா 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார். 'டிராகன்' படத்தின் மூலம் பிரபலமான கயாடு லோஹர், சிம்பு, அதர்வா முரளி, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவர்களுடன் டூயட் பாட பல ஹீரோக்கள் விரும்புகிறார்கள். அதனால் இவர்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் படங்களை பிடிப்பதில் இவர்கள் இருவருக்கும் மறைமுக போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழில் நடிக்க விரும்பும் இவர்கள் இருவருக்கும் தமிழ் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தமிழ் கற்க முயற்சிக்கிறார்கள்.




