35 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீசாகும் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி படம் | 'ஜனநாயகன்' விஜய் பெயர் 'தளபதி வெற்றி கொண்டான்' ? | அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம் | ரூ.100 கோடியைக் கடந்தது 'ரெட்ரோ' : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா | கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தின் மெகா ஸ்டார் சிரஞ்சிவி. 80, 90களில் அவருடைய படங்களும், படங்களின் பாடல்களும் அந்தக் கால தெலுங்கு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியவை. அப்படியான படங்களில் ஒன்றுதான் 'ஜகதக வீருடு அதிலோக சுந்தரி'.
ராகவேந்திராவ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, அம்ரிஷ்புரி, பேபி ஷாலினி, பேபி ஷாமிலி, கன்னட பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் 1990ம் ஆண்டு மே 9ம் தேதி வெளியானது. அந்தக் காலத்தில் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம். தமிழில் 'காதல் தேவதை' என்ற பெயரில் டப்பிங் ஆகி இங்கும் நன்றாகவே ஓடியது.
அப்படத்தை 35 வருடங்களுக்குப் பிறகு அதே மே 9ம் தேதி மீண்டும் ரீரிலீஸ் செய்ய உள்ளார்கள். ரீரிலீஸ் செய்யப்படும் சில முக்கிய படங்களுக்கு மீண்டும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதுபோல இந்தப் படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.