தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
ஏ.பி.நாகராஜன்தான் மாயாஜாலங்கள் நிறைந்த பேண்டசி படங்களின் தந்தை. அன்றைக்கு இருந்த குறைந்தபட்ட தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு அவர் ரசிகர்களை மிரட்டினார். ஆனால் அதற்கு முன்னோடியான படம் 'வேதாள உலகம்'. 1948ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் தயாரித்து, இயக்கினார். முழு படத்தையும் காரைக்குடியில் இருந்த ஏவிஎம் ஸ்டூடியோவில் ஷெட் போட்டு படமாக்கினார்.
வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் இருந்த பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய கதைதான் 'வேதாள உலகம்'. இதனை ப.நீலகண்டன் திரைக்கதையாக எழுதினார். பேய் தேசத்தை ஆளும் சக்தி கொண்ட புத்தகத்தைப் பற்றிய இந்த கற்பனைக் கதை பார்வையாளர்களுக்கு முற்றிலும் ஒரு மாறுபட்ட புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் விளிம்பில் இருந்த மக்களின் மனதில் உற்சாகத்தையும் பரப்பும் விதத்தில் படமாக்கப்பட்டு இருந்தது. முழுப் படமும் கறுப்பு -வெள்ளை நிறத்தில் இருந்தபோதும், கடைசி காட்சிக்கு வண்ணம் தீட்டப்பட்டது. இது பார்வையாளர்களுக்கு 'கட்டாயம் பார்க்க வேண்டிய' படமாக அமைந்தது.
டி.ஆர்.மகாலிங்கம், கே.சாரங்கபாணி, மங்கலம், கே.ஆர்.செல்லம் மற்றும் சி.டி.ராஜகாந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி 1948ம் ஆண்டு வெளியாகி அந்த காலகட்டத்திலேயே வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்து. பிற்காலத்தில் 'மை டியர் குட்டிச் சாத்தான்' புதிய தொழில்நுட்பத்தால் மிகப் பெரிய வசூலை பெற்றதைப்போன்று இந்த படம் அன்றைக்கு பெரிய வசூலை பெற்றது. இந்த படத்தின் லாபத்தில்தான் மெய்யப்ப செட்டியார் சென்னையில் ஏவிஎம் நிறுவனத்தை தொடங்கினார்.