9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சந்தானம். டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்தும், தொகுத்தும் வழங்கி வந்த சந்தானத்தை 2004ல் வெளிவந்த 'மன்மதன்' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகம் செய்தவர் சிம்பு. அதன்பின் தனது நகைச்சுவை நடிப்பு மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சந்தானம்.
குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கும் கதாநாயகனாக நடிக்கும் ஆசை வந்தது. நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பத்து வருடங்களுக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடித்த 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் வெளிவந்தது. சுமாரான வரவேற்பை அந்தப் படம் பெற்றாலும் தொடர்ந்து கதாநாயகாக மட்டுமே நடிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார் சந்தானம். முன்னதாக காமெடி நடிகராக நடிக்க ஒப்புக் கொண்ட சில படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.
தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குபட்டி ராமசாமி ஆகிய சில படங்கள் அவரது கதாநாயகப் படங்களில் வரவேற்பைப் பெற்ற படங்களாக இருந்தது. தற்போது நாயகனாக நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படம் மே 16ம் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே, சிம்பு அடுத்து நடிக்க உள்ள படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தின் பூஜை இன்று(மே 3) சென்னையில் நடைபெற்றது. சிம்பு, கயாடு லோஹர் ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்கிறார்.
தனது கதாநாயகக் கொள்கையை, தன்னை அறிமுகப்படுத்திய சிம்புவுக்காக விட்டுக் கொடுத்து இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் சந்தானம். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இருவரது ரசிகர்களிடத்திலும் மகிழ்வைத் தந்துள்ளன. அது போல படமும் தரும் என எதிர்பார்ப்போம்.