இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மே 1ம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. விமர்சன ரீதியாக படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்களிடத்தில் படம் பற்றிய 'டிரோல்'கள்தான் அதிகம் வந்தது.
'கன்னிமா' பாடல் இப்படத்திற்கு மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. அதுதான் படத்திற்கு ஒரு ஈர்ப்பையும் தந்தது. அதை வைத்து படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள் என்னவென்றே சொல்ல முடியாத ஒரு குழப்பமான படத்தைத்தான் பார்த்தனர் என்பது தியேட்டர் வட்டார வீடியோக்களிலிருந்து புரிந்தது. அவ்வளவு மோசமான படமாக இல்லை என்றாலும், இந்தப் படத்தை கொண்டு போய் சேர்க்கும் விதத்தில் கொண்டு போனால் இந்த விடுமுறை நாளில் கூடுதல் வசூலைப் பார்க்கலாம்.
ஆனால், படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், இரண்டே நாளில் இப்படத்திற்கு சிம்பிளாக ஒரு முடிவுரையை எழுதிவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது. எக்ஸ் தளத்தில், “தியேட்டர்களில் உரத்த ஆரவாரம், கைதட்டல், நிறைவான அன்பு ஆகியவற்றை எங்களுக்கு வழங்கிய ஒவ்வொரு பார்வையாளருக்கும் எங்கள் இதயங்களின் அடிப்பகுதியில் இருந்து நன்றி.
இது நல்ல காலத்தின் ஆரம்பம் என்று எனக்குத் தெரியும். ஆனால், நான் உண்மையிலே மிகவும் மகிழ்ச்சியடைந்ததால் இதைச் சொல்ல வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'தேங்க் யூ' என்ற போஸ்டருன் அவர் இதைப் பதிவிட்டுள்ளதால், இதற்கு மேல் 'ரெட்ரோ' பற்றி எந்த ஒரு பதிவும் போட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
'டூரிஸ்ட் பேமிலி' படத்தை வெளியீட்டிற்குப் பிறகும் புரமோஷன் செய்ய அப்படக் குழுவினர் கோயம்பத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்றுள்ளனர். 'ஹிட் 3' படத்தை புரமோஷன் செய்ய நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி அமெரிக்கா வரை போய் உள்ளனர். ஆனால், 'ரெட்ரோ' படத்தின் இயக்குனர் எக்ஸ் தளத்தில் நன்றி சொல்லியுள்ளார். படத்தின் நாயகன் மும்பை வீட்டிற்குச் சென்றுவிட்டார். வெளியீட்டிற்குப் பிறகான புரமோஷன்களில் இப்படக்குழுவினர் ஈடுபாடு காட்டாதது ஆச்சரியமாக உள்ளது.