எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாவுக்காக வந்திருந்த 26 அப்பாவி பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து எதிரிகளுக்கு தக்க பதிலடி தர அரசு தயாராகி வருகிறது. இந்த தாக்குதல் குறித்து திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்த தாக்குதல் பற்றி கேட்கப்பட்ட போது தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இது வெறும் பஹல்காம் மீது மட்டும் தொகுக்கப்பட்டுள்ள தாக்குதல் அல்ல.. ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கை மீதும் கொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.. அந்த சம்பவத்தில் தங்கள் கண்முன்னே தந்தையை இழந்த ஒவ்வொரு குழந்தையையும், தங்களது கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் தீராத வடுவை ஏற்படுத்தி உள்ளது. இப்போது நாம் எடுத்துக் கொண்டுள்ள இந்த நேரம் கூட, இந்தியா இதற்கு எப்படி தக்க வகையில் பதில் கொடுக்கும் விதமாக எதிர்வினையாற்ற போகிறது என்பதற்காக தான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.