சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் வெளிவந்தால் அவர்களது ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளங்களில் மோதல் வரும். ஆனால், சூர்யா படம் வரும் போது சமூக வலைத்தளங்களில் வசூல் பற்றிய 'டிரோல்கள்' அதிகமாக இருக்கும். அது அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'கங்குவா' படத்தின் போது நிறைய இருந்தது.
சூர்யா நடித்து நேற்று வெளியான 'ரெட்ரோ' படம் குறித்த வசூல் மோதலை தெலுங்குப் படமான 'ஹிட் 3' தேவையின்றி ஆரம்பித்து வைத்துள்ளது. அதற்கு 'ரெட்ரோ' வினியோகஸ்தரும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
'ஹிட் 3' படக்குழு முதல் நாள் வசூலாக 43 கோடி என்று பதிவிட்டு, கூடவே, “நேற்றைய உலக அளவிலான வசூலில் இந்தியப் படங்களில் அதிக வசூலைக் குவித்த ஹிட் 3” என்று மற்ற மொழிப் படங்களையும் சேர்த்து வம்பிழுத்துள்ளனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'ரெட்ரோ' வினியோகஸ்தர், “தமிழகத்தில் வழக்கமான டிக்கெட் கட்டணத்தில் 17.75 கோடி வசூல்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆந்திரா, தெலங்கானாவில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளிவந்தால் டிக்கெட் கட்டணங்ளை சுமார் 10 நாட்கள் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி உண்டு. இரண்டு மாநிலங்களிலும் அவர்களது படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
அப்படியான டிக்கெட் கட்டண வசூலை வைத்துக் கொண்டுதான் அதிக வசூல், அதிக வசூல் என அவர்கள் கூவிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அப்படியான டிக்கெட் கட்டண உயர்வு நடப்பதில்லை. இதை மற்ற ரசிகர்களுக்கும் புரியம்படி தக்க பதிலடி கொடுத்துள்ள 'ரெட்ரோ' குழு.