யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
புராண படங்கள் அதிகமாக வந்து கொண்டிருந்த காலத்தில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் கதைகளும் படங்களாக வந்தன. ஆனால் ஏனோ திருமழிசை ஆழ்வாரின் வரலாற்று படம் அன்றும் சரி, அதற்கு பின்னரும் சரி பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை.
சென்னை அருகில் உள்ள திருமழிசையில் பிறந்தவர்தான் திருமழிசை ஆழ்வார். பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவி கருவுற்று பன்னிரண்டு மாத்திற்கு பிறகு உடல் உறுப்புகள் இல்லாத ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் மனம் வருந்திய தம்பதியர் அந்த குழந்தையை பிரம்பு காட்டில் தூக்கி எறிந்து விட்டுச் சென்றனர்.
ஆண்டவன் அருளால் எல்லா உறுப்புகளும் அமையப் பெற்ற ஓர் அழகிய ஆண் குழந்தையானது. அவ்வழியே வந்த மகப்பேறு இல்லாத தம்பதிகளான பிரம்புத் தொழில் புரியும் திருவாளன், பங்கயச்செல்வி என்பவர்கள் குழந்தையைக் கண்டெடுத்து வளர்க்க தீர்மானித்தனர்.
குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் பால் சுரத்தல் உள்ளிட்ட எல்லா அம்சங்களும் அந்த பெண்ணுக்கும் வாய்த்தது. பிறந்து வளர்ந்து அந்த குழந்தை பின்னாளில் இறைவன் புகழ்பாடி ஆழ்வார்களில் ஒருவரானது என்பதுதான் திருமழிசை ஆழ்வாரின் கதை.
திருமழிசை ஆழ்வார் மீது மிகுந்த பற்றுக் கொண்ட சென்னை நகரத்தின் பிரபல வணிகக் குடும்பமான எம். சக்ரவர்த்தி ஐயங்கார், எம்.டி. பிரதர்ஸ் மற்றும் வெற்றிகரமான ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் வியாபாரி சி. கண்ணபிரான் பிள்ளை ஆகிய இரு நண்பர்கள், திருமழிசை ஆழ்வாரின் வாழ்க்கையை படமாக தயாரித்தனர்.
எம்.எம். தண்டபாணி தேசிகர் திருமழிசை ஆழ்வாராக நடித்தார். அவருடன் திருச்சூர் பிரேமாவதி, வித்வான் சீனிவாசன், பி.பி. ரங்காச்சாரி, எஸ்.வி. சுப்பையா, ஆர்.பாலசுப்ரமணியம், டி.எஸ். துரைராஜ், டி.வி. நாராயணசாமி, எம்.ஆர்.சுவாமிநாதன், கே.கே. பெருமாள், எம்.எஸ். தேவசேனா, பி.கே. சரஸ்வதி, பி.எஸ். சிவபாக்யம், கே.எஸ். அங்கமுத்து, 'மாஸ்டர்' பத்மநாபன், டி.கே. கல்யாணம், சி.ஆர்.லட்சுமிதேவி, ஏ.கே. ஸ்ரீநிவாசன், கே.ஆர். ராஜகோபாலன், எம்.எஸ். ராகவன் மற்றும் கே.கே. ராதா உள்பட பலர் நடித்தனர். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்தார். டி.எஸ்.கோட்னி இயக்கினார்.
படம் பெரிய வெற்றி பெறவில்லை. திரைப்படத் தயாரிப்பில் முறையான அனுபவம் இல்லாத தயாரிப்பாளர்களால் படத்தை சரியாக கொண்டு சேர்க்க முடியவில்லை என்றும், புதிய தயாரிப்பாளார்களுக்கு அன்றைய திரையுலகம் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறுவார்கள். தற்போது படத்தின் ஒரு சில பாடல்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.