கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! |

நடிகை மஞ்சு வாரியர் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக உயர்ந்த காலகட்டத்திலும் சரி, அதன்பிறகு சினிமாவுக்கு இடைவெளி விட்டு மீண்டும் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் 15 வருடங்களாக மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வரும்போதும் சரி, தனது உயிர் மூச்சான நடனத்தை எப்போதும் கைவிட்டதில்லை. அவர் சினிமாவிற்கு இடைவெளி விட்ட காலத்தில் கூட நடனத்தில் விடாமல் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் உலக நடன தினத்தை முன்னிட்டு மஞ்சு வாரியர் தான் நடன பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
அவரது குச்சுப்புடி நடன ஆசிரியை கீதா பத்மகுமார் வீடியோ கால் மூலமாக கொடுத்த பயிற்சிக்கு ஏற்ப அந்த வீடியோவில் மஞ்சு வாரியர் பயிற்சி செய்கிறார். அப்போது தன்னை அறியாமல் இரண்டு ஸ்டெப்ஸ்களை மாற்றி போட்ட மஞ்சு வாரியர், அதை எதிரில் இருக்கும் தனது ஆசிரியையை பார்த்து சிரித்துக் கொண்டே மன்னிப்பு கேட்பது போல, மீண்டும் சரியான நடன அசைவுக்கு திரும்பி அந்த பயிற்சியை செய்கிறார். தான் செய்த தவறை அவர் அப்படி அழகாக மாற்றிக்கொண்ட இந்த க்யூட் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.