'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு |
ஓதுவார்கள் ஆன்மிக குருக்கள், கோயில்களுக்குள் மட்டுமே பேசப்பட்டு வந்த ஆண்டாளின் பெருமையை சாதாரண மக்களுக்கும் சொன்ன படம் 'ஸ்ரீ ஆண்டாள்'. 1948ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் யு.ஆர். ஜீவரத்னம் ஆண்டாளாக நடித்தார். அப்போது அவருக்கு வயது 20.
பி.எஸ். கோவிந்தன் ஆண்டாளின் தந்தையாக நடித்தார். இவர்கள் தவிர, 'வித்வான்' சீனிவாசன், எஸ்.டி. சுப்பையா, 'குமாரி' செல்வம், காளி என்.ரத்தினம், பி.கே. மாதவன், வி.எம். ஏழுமலை, 'கோட்டப்புலி' ஜெயராமன், எஸ்.கே. ராமராஜ், பி.எஸ். ஞானம், எம்.இ.மாதவன், ஜி.ஆர். ஸ்ரீராமுலு, எம்.கே. கமலம், எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ஜி.சவுதாமினி ஆகியோரும் நடித்தனர். ஜி.ராமநாதன் இசையமைத்தார்.
ஆனால் அதற்கு முன்பு அதாவது 1937ம் ஆண்டு ஆண்டாளின் கதை திரைப்படமாக வெளியானது. பிரபல தேவாரப் பாடகர் சுந்தர ஓதுவார் மூர்த்தி ஆண்டாளின் தந்தையாக நடித்தார். ஆண்டாளாக நடித்தது யார் என்பது உள்ளிட்ட வேறு எந்த தகவலும் இந்த படம் தொடர்பாக கிடைக்கவில்லை. அதனால் 'ஸ்ரீ ஆண்டாள்' படமே ஆண்டாளின் பெருமை பேசும் முதல் படமாக பதிவாகிறது. இந்தப் படங்களின் பிரிண்டுகளுமே இப்பொழுது இல்லை.