தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
இந்தியத் திரையுலகத்தில் வெளியாகும் ஒரு சில படங்கள் மட்டுமே இந்திய பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலைக் குவிக்கின்றன. லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் விக்கி கவுஷல், அக்ஷய் கண்ணா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளிவந்த ஹிந்திப் படம் 'சாவா'. படம் வெளியான பின் சில சர்ச்சைகள் வந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வசூலைக் குவித்தது.
இந்திய வசூலில் மட்டும் இப்படம் 600 கோடி ரூபாய் நிகர வசூலைக் கடந்துள்ளது. ஓடிடியில் வெளியான பிறகும் இப்படம் தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன்பு 'புஷ்பா 2, ஸ்த்ரீ 2' ஆகிய படங்கள் அந்த வசூலைப் பெற்றிருந்தன. அவற்றில் 'புஷ்பா 2' படம் ஹிந்தியில் டப்பிங் ஆன படம். 'ஸ்த்ரி 2' படம் மட்டுமே நேரடி ஹிந்திப் படம். அப்படிப் பார்த்தால் இரண்டாவதாக அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை 'சாவா' பெறுகிறது.
'புஷ்பா 2, ஸ்த்ரி 2' ஆகியவை இரண்டாம் பாகப் படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆனால், 'சாவா' படத்திற்கு அப்படியில்லை.