'டூரிஸ்ட் பேமிலி' இடத்தை பிடிக்குமா 'ஹவுஸ் மேட்ஸ்' | பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் |
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படம் ‛மதராஸி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் சிவகார்த்திகேயனின் 23வது படமாக வெளியாக உள்ளது. இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைக்க, ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.