மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
1944 - 1945ம் ஆண்டுகளில் தியாகராஜ பாகவதர் நடிப்பதாக நான்கு படங்கள் அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் 'கோகுலதாஸி'. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே.டி பாகவதர் 30 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பல படங்களில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். அதில் இந்த படமும் ஒன்று.
'கோகுலதாஸி' பட திரைக்கதை எழுத்தாளர் இளங்கோவனால் எழுதப்பட்ட ஒரு புராண கற்பனை கதை. இதில் ஹொன்னப்பா மூன்று வேடங்களில் நடித்தார். நாரதர், பார்வதியின் சாபத்தை எதிர்கொள்ளும் காமரூபன், மற்றும் கதாநாயகி அனுராதாவை (ராஜம்மா) கவர மாறுவேடத்தில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் நகைக்கடைக்காரன் ஆகிய வேடங்களில் நடித்தார். கதாநாயகி ராஜம்மா நடனக் கலைஞராகவும், தேவதாசியாகவும் இரண்டு வேடங்களில் நடித்தார். லலிதாவும், பத்மினியும் துணை வேடங்களில் நடித்தனர், நடனமாடினர்.
பாடல்கள் பாபநாசம் சிவன் மற்றும் அவரது சகோதரர் ராஜகோபால ஐயர் ஆகியோரால் எழுதப்பட்டன. எஸ்.வி. வெங்கடராமன் இசையமைத்தார். கே.சுப்பிரமணியம் தயாரித்து, இயக்கினார். திறமையான நடிகர்கள், இசை மற்றும் திறமையான இயக்கம் இருந்தபோதிலும், கோகுலதாஸி வெற்றி பெறவில்லை.