நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் | முக்குத்தி அம்மன் 2 கிளைமாக்ஸ் : சென்டிமென்ட் ஆக குஷ்பு ஆடுகிறாரா? | அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கிரைம் கதை | யாருக்கோ... ஏதோ சொல்கிறார் தீபிகா படுகோனே… | மீண்டும் ஓடிடியில் 'குட் பேட் அக்லி' : இளையராஜா பாடல்கள் மாற்றம் | 2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான 'ஹோம்பவுண்ட்' | விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை |
மலையாளத்தில் குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராக பெயர் பெற்றவர் ஷைன் டாம் சாக்கோ. நடிப்புக்காக மட்டுமல்லாமல் அவ்வப்போது சர்ச்சையாக கொடுக்கும் பேட்டிகள் மூலமும் பிரபலமானவர். தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நானி கதாநாயகனாக நடித்த 'தசரா' படத்தில் மெயின் வில்லனாக நடித்தவர் இவர் தான். அதே சமயம் 'பீஸ்ட்' படத்தில் தனது கேரக்டரை டம்மி பண்ணி விட்டார்கள் என்றும் படம் குறித்தும் சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வரும் இவர், கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி தமிழில் வெளியான 'குட் பேட் அக்லி', மலையாளத்தில் வெளியான 'பஷூக்கா' மற்றும் 'ஆலப்புழா ஜிம்கானா' என மூன்று படங்களில் நடித்திருந்தார். 'குட் பேட் அக்லி'யில் இடைவேளைக்கு பின் என்ட்ரி கொடுத்து அஜித்தின் வீரதீர பராக்கிரமங்களை பற்றி புகழ் பாடுபவராக சில நிமிட காட்சிகள் மட்டும் வந்து தனது கடமையை முடித்துக் கொண்டார் ஷைன் டாம் சாக்கோ.
அதேபோல மம்முட்டியின் 'பஷூக்கா' திரைப்படத்திலும் வில்லன் கூட்டத்தில் ஒருவராக வந்தவர், நின்று விளையாடுவார் என்று பார்த்தால் சிங்கிள் ரன் எடுத்ததோடு கிளம்பிச் செல்லும் பேட்ஸ்மேன் போல ஒரே காட்சியுடன் சென்றுவிட்டார். அதேபோல தான் 'ஆலப்புழா ஜிம்கானா' படத்தில் ஹீரோ உள்ளிட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் கோச்சாக ஒரு பிரபலம் இல்லாத நடிகர் படம் முழுவதும் வரும் வகையில் நடித்திருந்த நிலையில், ஷைன் டாம் சாக்கோ மல்யுத்த சண்டை நடைபெறும் களத்தில் ரெப்ரீயாக ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.
இப்படி நல்ல நடிப்புத் திறமை உள்ள ஒரு நடிகரை ஒரு காட்சியில் மட்டும் வந்துபோகும் விதமாக நடிக்க வைத்து வீணடிக்கலாமா என்று ரசிகர்கள் பலர் சோசியல் மீடியாவின் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.