மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் பிடிபட்ட போதை பொருள் கடத்தும் கும்பல், நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தாங்கள் தொடர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்வதாக வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.
அதேபோல ஷைன் டான் சாக்கோவுடன் ஒரு படத்தில் நடித்த சக நடிகையான வின்சி அலோசியஸ் என்பவர், படப்பிடிப்பிலேயே ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார் என குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி சாக்கோ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை இவரை கடந்த சில நாட்களாக விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில், தான் போதைப் பொருள் பயன்படுத்துவதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார் ஷைன் டாம் சாக்கோ. அதுமட்டுமல்ல, இந்த பாதிப்பில் இருந்து, தான் வெளியே வர வேண்டும் என விரும்பும் சாக்கோ, இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதை மீட்பு மையத்திற்கு தான் செல்ல விரும்புவதாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் போதை மீட்பு மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார் என்று காவல்துறையில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.