சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனரான ஷாஜி என்.காருண் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். அவரது வயது 73. கடந்த சில வருடங்களாகவே புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். மோகன்லால், மம்முட்டி என இவருடன் இணைந்து பணியாற்றிய பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ஷாஜி என் காருண் அதிக அளவில் விருதுகளை பெற்ற பல படங்களை இயக்கியுள்ளார். பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். 1974ல் 'ஜெனிசிஸ்' என்கிற படம் மூலமாக ஒளிப்பதிவாக சினிமாவில் நுழைந்தவர், கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதை தொடர்ந்து 1989ல் 'பிறவி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்தார். மோகன்லால் நடித்த 'வானப்பிரஸ்தம்', மம்முட்டி நடிப்பில் வெளியான 'குட்டி ஸ்ராங்' உள்ளிட்ட ஏழு படங்களை இவர் இயக்கியுள்ளார், இதில் வானப்பிரஸ்தம் படத்தில் நடித்த மோகன்லாலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கேரள மாநில அரசின் விருதும் கிடைத்தது. ஷாஜி என் காருணுக்கு சிறந்த இயக்குனருக்கான கேரள மாநில அரசு விருது கிடைத்தது.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மலையாள திரை உலகில் இருந்து மூன்று முறை கேன்ஸ் திரைப்பட விழாவில் இவரது படங்கள் நாமினேட் செய்யப்பட்டன. அதில் 1989ல் வெளியான பிறவி திரைப்படத்திற்கு கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் சிறந்த படம் என்கிற சிறப்பு பிரிவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது. அது மட்டுமல்ல சிறந்த இயக்குனருக்காக பல சர்வதேச விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். திரைப்படங்களை மட்டுமல்ல 10க்கும் மேற்பட்ட குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.