விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‛குட் பேட் அக்லி' திரைப்படத்தில் சில இளம் நட்சத்திரங்கள் பெரிய அளவில் வெளிச்சம் பெற்றுள்ளனர். ஏற்கனவே மலையாளத்தில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் அதில் ஒருவர், அதேபோல அஜித், திரிஷா தம்பதியின் மகனாக நடித்திருந்த கார்த்திகேயா தேவ் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே பிரபாஸின் ‛சலார்' திரைப்படத்தில் சிறு வயது பிரித்விராஜாக நடித்தவர். அந்த படத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான ‛எம்புரான்' படத்திலும் ஜூனியர் பிரித்விராஜ் ஆக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஜித் படம் மூலம் இன்னும் பிரபலம் அடைந்துள்ளார் கார்த்திகேயா தேவ். அதே சமயம் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‛பிரேமலு' படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேன் தான். ஆனால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் ‛ஆலப்புழா ஜிம்கானா' திரைப்படமும் இதே ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் நஸ்லேன் கூறும்போது, “குட் பேட் அக்லியில் அஜித்தின் மகனாக நடிக்கும்படி ஆதிக் ரவிச்சந்திரன் என்னை அணுகினார். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு அது. ஆனாலும் அது பெரிய படம். இரண்டு ஷெட்யூலாக அதிக நாட்கள் எடுக்கப்பட இருந்தது. அந்த சமயத்தில் தான் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தேன். அதனால் குட் பேட் அக்லி படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. என்னை தேடி வந்த அஜித் பட வாய்ப்பை நான் மிஸ் பண்ணி விட்டேன்” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.