'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
ஓடிடி-யில் வாரம் வாரம் படங்கள் வெளியாகின்றன. அதில் பார்வையாளர்களின் ரசிக்கும் தன்மையில் படங்கள் அமைந்துள்ளதா என்பதை இந்த வாரம் வெளியான படங்களின் வெளியீடு பற்றி பார்ப்போம்...
டெஸ்ட் : கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுத்திருக்கும் இந்த படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கி உள்ளார். பார்வையாளர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளது. இருந்தாலும் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல பார்வையாளர்களை கொண்டுள்ளது.
மர்மர் : இது ஒரு அட்வென்ஜெர் திரில்லர் படமாக திரையரங்கில் வெளியாகி, ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் சுமாரான வசூலையும் ஈட்டி தந்தது. அப்படி என்னதான் இருக்கு இந்த படத்தில் இருக்கு என்ற ஆர்வத்தை ரசிகர்களிடையே தூண்டியது. தற்போது இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி சுமாரான வரவேற்பையும் பெற்றுள்ளது.
பேபி அண்ட் பேபி : சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். திரையரங்கில் சுமாரான வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது ஆஹா தமிழ் ஓடிடியில் ஏப்ரல் 04 அன்று வெளியானது. பெரிய வரவேற்பு ஒன்றும் இல்லையென்றாலும் போதிய பார்வையாளர்கள் இல்லாததே வருத்தமான செய்தி.
ஜென்டில்வுமன் : புது இயக்குனர் ஜோசுவா சேதுராமன் இயக்கிய படம் 'ஜென்டில்வுமன்'. ஜெய்பீம் என்ற படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் நடித்தனர். இந்த படம் மார்ச் 07 அன்று திரையரங்கில் வெளியாகியது. தற்போது இந்த திரைப்படம் டெண்ட்கொட்டா ஓ.டி.டியில் வெளியாகி வரவேற்பு இல்லாமல் இருக்கிறது.