சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'விடாமுயற்சி' டிரைலர், படம் ஆகிய எதுவும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. 'விடாமுயற்சி' டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 9 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றது. 'வலிமை' டிரைலரை விடவும் குறைவான பார்வைகளையே பெற முடிந்தது.
அதேசமயம், நேற்று இரவு வெளியான 'குட் பேட் அக்லி' டிரைலர் அதற்குள்ளாக 9 மில்லியன் பார்வைகளை நெருங்கிவிட்டது. விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' டிரைலர் 24 மணி நேரத்தில் 31 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதுதான் இதுவரை சாதனையாக உள்ளது.
அந்த சாதனையை 'குட் பேட் அக்லி' முறியடிக்குமா என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், அது நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 15 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் கடந்தால் அதுவே அதிகமானதுதான் என்று தோன்றுகிறது.
டீசர், டிரைலர்கள், பாடல்கள் சாதனையைப் பொறுத்தவரையில் அஜித்தை விடவும், மற்ற முன்னணி நடிகர்களை விடவும் விஜய் தான் முன்னணியில் உள்ளார்.