சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

காப்பி ரைட் சட்டம் வராத காலத்தில் யார் வேண்டுமானாலும், யார் கதையை வேண்டுமானாலும் படமாக்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் படமாக்கலாம் என்கிற நிலை இருந்தது. இதனால் பல கதைகள், நாடகங்கள் பலரால் பல காலகட்டங்களில் படமாக்கப்பட்டது. ஆனால் ஒரே ஆண்டுக்குள் ஒரு கதையை மூன்று தயாரிப்பாளர்கள் தயாரித்தார்கள் என்பது முக்கியமான ஒன்று அந்த கதை 'பில்ஹானா'.
இது ஒரு புகழ்பெற்ற காஷ்மீரி கதை. காஷ்மீர் மன்னன் தன் மகளுக்கு கல்வி கற்பிக்க ஒரு கவிஞனை நியமிக்கிறான். அந்த கவிஞர் அழகாக இருப்பதால் தன் மகள் காதலித்து விடுவாளோ என்று பயந்த மன்னன் ஒரு தந்திரம் செய்தான். கவிஞன் பார்வையற்றவன் என்று மகளிடம் சொன்னான். தன் மகள் தீயில் முகம் கருகிய அழகற்றவள் என்று அந்த கவிஞரிடம் சொன்னார். இருவருக்கும் இடையில் திரையிடப்பட்டது.
கவிஞன் இளவரசிக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தான். முழு பவுர்ணமி அன்று ஒரு நாள் கவிஞன் நிலவை புகழ்ந்து பாட இளவரசிக்கு சந்தேகம் வந்தது. கண்பார்வையில்லாத ஒருவனால் எப்படி நிலவை இப்படி வர்ணிக்க முடியும் என்று கருதி திரையை விலக்கி பார்த்தாள். கவிஞன் பேரழகான இருந்தான். கவிஞனும் இளவரசியை பார்த்தான் பேரழியாக இருந்தாள்.
இருவரும் காதலிக்கிறார்கள். இதை அறிந்த மன்னன் இவருக்கும் மரண தண்டனை விதிக்கிறான். காதலுக்கு ஆதரவாக மக்கள் நாடு முழுவதும் கிளர்ச்சி செய்கிறார்கள். வேறு வழியில்லாத மன்னன் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறான்.
இப்படி ஒரு கதையை யாருக்குத்தான் சினிமாவாக எடுக்கத் தோன்றாது. 1948ம் ஆண்டு இந்த கதையை 'பில்ஹணன்' என்ற பெயரில் டிகேஎஸ் சகோதரர்கள் திரைப்படமாக தயாரித்தார்கள், கே.வி.ஸ்ரீனிவாசன் இயக்கினார், டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, திரவுபதி நடித்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது.
பின்னர் இதே கதையை 'பில்ஹணு' என்ற பெயரில் முபாரக் பிக்சர்ஸ் தயாரித்தது. பி.என்.ராவ் இயக்கினார், கே.ஆர்.ராமசாமி, ஏ.ஆர்.சகுந்தலா நடித்தனர். முதல் படம் ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த படம் நவம்பர் மாதம் வெளியானது. ஏற்கெனவே வெளியான படம் பெரிய வெற்றி பெற்று விட்டதால் பில்ஹனாவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையில் இதே பில்ஹனா கதையை தியாகராஜ பாகவதர் நடிப்பில் படமாக்கப்போவதாக மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். ஆனால் தியாகராஜ பாகவதர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை சென்றதால் அந்த படம் கைவிடப்பட்டது.