‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் வடிவேலுவும், பஹத் பாசிலும் இணைந்து நடித்தனர். இந்த கூட்டணிக்கு வரவேற்பு கிடைத்ததால் அடுத்தபடியாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 'மாரீசன்' படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கும் இந்த படம், ஒரு நடுத்தர வயதை சார்ந்தவரும், ஒரு இளைஞரும் நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வரை சாலையில் பயணம் செய்யும் போது ஏற்படும் அனுபவத்தை மையமாக கொண்டதாக காமெடி கலந்த கதையில் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இத்திரைப்படம் இவ்வருட ஜூலை மாதம் திரைக்கு வருகிறது என நேற்று அறிவித்துள்ளனர். அதேசமயம் ரிலீஸ் தேதியை அவர்கள் குறிப்பிடவில்லை.